• Jun 03 2026

உப்பாறு ஆற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 60 மாடுகள் மீட்பு!

Chithra / Dec 3rd 2025, 3:41 pm
image


​கிண்ணியா - உப்பாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்ட சுமார் 60 எருமை மாடுகள் இன்று பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினரின் கடுமையான போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டன.


​கிண்ணியா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஆற்றில் அபாயகரமான அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கிய சுமார் 60 எருமை மாடுகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன.


​ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மாடுகள், உப்பாறு பாலத்தைக் கடந்து கடலை நோக்கிச் செல்லும் அபாயகரமான நிலையில் இருந்தன. இதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக உப்பாறு பாலத்தின் மீது கூடினர்.


​மாடுகள் கடலுக்குள் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அவர்கள் அனைவரும் சத்தம் எழுப்பியும், பல்வேறு முயற்சிகள் மூலமும் மாடுகளைக் கலைக்க முற்பட்டனர். இருப்பினும், வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் மாடுகள் தொடர்ந்து கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டன.


​மாடுகள் கடலில் மூழ்கி உயிரிழப்பதற்குச் சொற்ப நேரமே இருந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சிலர் உடனடியாகப் படகுகளைக் கொண்டு வந்து மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர்.


​வெள்ளத்தின் கடும் நீரோட்டத்துக்கு மத்தியில், படகுகள் மூலம் மாடுகளை, மிகுந்த பிரயத்தனத்துடன் ஆற்றின் கரையோரத்திற்குக் கொண்டு சேர்த்தனர். 


உப்பாறு ஆற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 60 மாடுகள் மீட்பு ​கிண்ணியா - உப்பாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்ட சுமார் 60 எருமை மாடுகள் இன்று பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினரின் கடுமையான போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டன.​கிண்ணியா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஆற்றில் அபாயகரமான அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கிய சுமார் 60 எருமை மாடுகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன.​ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மாடுகள், உப்பாறு பாலத்தைக் கடந்து கடலை நோக்கிச் செல்லும் அபாயகரமான நிலையில் இருந்தன. இதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக உப்பாறு பாலத்தின் மீது கூடினர்.​மாடுகள் கடலுக்குள் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அவர்கள் அனைவரும் சத்தம் எழுப்பியும், பல்வேறு முயற்சிகள் மூலமும் மாடுகளைக் கலைக்க முற்பட்டனர். இருப்பினும், வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் மாடுகள் தொடர்ந்து கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டன.​மாடுகள் கடலில் மூழ்கி உயிரிழப்பதற்குச் சொற்ப நேரமே இருந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சிலர் உடனடியாகப் படகுகளைக் கொண்டு வந்து மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர்.​வெள்ளத்தின் கடும் நீரோட்டத்துக்கு மத்தியில், படகுகள் மூலம் மாடுகளை, மிகுந்த பிரயத்தனத்துடன் ஆற்றின் கரையோரத்திற்குக் கொண்டு சேர்த்தனர். 

Advertisement

Advertisement

Advertisement