கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னரே இந்த வாகனங்கள் முற்பதிவு செய்யப்பட்டமையால், அவற்றை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த வாகனத் தொகுதிக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன.
வாகனங்களை விடுவிப்பதற்கான நிபந்தனைகளில் ஏதேனும் சலுகைகளை வழங்கியாவது அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வாகனங்களை விடுவிக்க முடியாமல் போயுள்ளதால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 வாகனங்களை விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னரே இந்த வாகனங்கள் முற்பதிவு செய்யப்பட்டமையால், அவற்றை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,இந்த வாகனத் தொகுதிக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன.வாகனங்களை விடுவிப்பதற்கான நிபந்தனைகளில் ஏதேனும் சலுகைகளை வழங்கியாவது அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இதன் மூலம் அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த வாகனங்களை விடுவிக்க முடியாமல் போயுள்ளதால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.