கம்பஹா - கடவத்தை – மன்கட வீதி பகுதியில் இன்று நண்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு மின்சார ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால், அடுத்ததாக நடந்ததுதான் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்.
இந்த விபத்தில் ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (02) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரத்தை துண்டிக்காமல் சீரமைப்பு பணி; ஊழியர் பலி – இருவர் படுகாயம் கம்பஹா - கடவத்தை – மன்கட வீதி பகுதியில் இன்று நண்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு மின்சார ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனால், அடுத்ததாக நடந்ததுதான் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்.இந்த விபத்தில் ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (02) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.