• May 19 2026

தொடர்ச்சியாக முன்னெடுக்கபடும் கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு !

Ziya / Dec 18th 2025, 5:42 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புகையிரத சேவைகள் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் இன்றுவரை  24 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் மன்னம்பிட்டி தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான வெள்ளதினால் பாதிக்கப்பட்ட புகையிரத  பாதையை இனம் கண்டு அவற்றை தொடர்ச்சியாக புனரமைப்பு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இதேவேளை இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


அரச ஊழியர்களுக்கான தூரப் பிரயாணங்கள் தபால் பொதிகள் எடுத்து வரும் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் எரிபொருள் சேவைகள் சரக்கு ரயில் சேவைகள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு புகையிரத நிலைய முச்சக்கர வண்டி சாரதிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படுகின்றனர்.


மக்கள் தொடர்ச்சியாக புகையிரத நிலையத்திற்கு வந்து  ஏமாற்றத்துடன் செல்வதை காண முடிகிறது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கபடும் கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புகையிரத சேவைகள் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் இன்றுவரை  24 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மன்னம்பிட்டி தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான வெள்ளதினால் பாதிக்கப்பட்ட புகையிரத  பாதையை இனம் கண்டு அவற்றை தொடர்ச்சியாக புனரமைப்பு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரச ஊழியர்களுக்கான தூரப் பிரயாணங்கள் தபால் பொதிகள் எடுத்து வரும் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் எரிபொருள் சேவைகள் சரக்கு ரயில் சேவைகள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு புகையிரத நிலைய முச்சக்கர வண்டி சாரதிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படுகின்றனர்.மக்கள் தொடர்ச்சியாக புகையிரத நிலையத்திற்கு வந்து  ஏமாற்றத்துடன் செல்வதை காண முடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement