• Jun 18 2026

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

shanu / Jun 17th 2026, 3:48 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,


முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும், தண்ணிமுறிப்புக் கிராமமும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.


அதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் ஏ.சி.பாம் கிராமமும் இதுவரைமில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.


இந்த கிராமங்கள் தமிழ்மக்களின் பூர்வீக கிராமங்களாகும். கடந்தகாலத்தில் இக்கிராமங்களில் எமது தமிழ் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.


அங்கு அந்த மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போதும் காணப்படுகின்றன.


எனவே அந்த மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.


இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்,


நாம் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.


எனினும் அந்தக் கிராமங்களில் எவரும் மீள்குடியேறுவதற்குத் தயாராக இல்லை. அங்கு மீள்குடியேறுவதற்கு தமது பெயர்விபரங்களைத் தருவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.


எனவே கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்துளம் பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு தயாராக உள்ளவர்களின் பெயர்விபரங்களை தாங்களாவது பெற்றுத்தருவீர்களெனில் அவர்களை மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார்.


இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,


தங்களிடம் யாரும் பெயர்விபரங்களைத் தரவில்லை எனக் கூறவேண்டாம். இதற்கு முன்பு இருந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடம் அந்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர்.


அதேபோல் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றம்செய்யுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மீள்குடியேறத் தயாராக உள்ள மக்களின் பெயர்விபரங்களும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன.


எனவே அந்துமக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்தினார்.


இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் வலியுறுத்தியதையடுத்து, இந்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் மீள்குடியேற்றம்தொடர்பாக விசேட கூட்டமொன்றை ஒழுங்குசெய்யுமாறு இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.


மேலும் இதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள ஏ.சி.பாம் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கவனஞ்செலுத்தவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும், தண்ணிமுறிப்புக் கிராமமும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.அதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் ஏ.சி.பாம் கிராமமும் இதுவரைமில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.இந்த கிராமங்கள் தமிழ்மக்களின் பூர்வீக கிராமங்களாகும். கடந்தகாலத்தில் இக்கிராமங்களில் எமது தமிழ் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.அங்கு அந்த மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போதும் காணப்படுகின்றன.எனவே அந்த மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்,நாம் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.எனினும் அந்தக் கிராமங்களில் எவரும் மீள்குடியேறுவதற்குத் தயாராக இல்லை. அங்கு மீள்குடியேறுவதற்கு தமது பெயர்விபரங்களைத் தருவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.எனவே கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்துளம் பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு தயாராக உள்ளவர்களின் பெயர்விபரங்களை தாங்களாவது பெற்றுத்தருவீர்களெனில் அவர்களை மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,தங்களிடம் யாரும் பெயர்விபரங்களைத் தரவில்லை எனக் கூறவேண்டாம். இதற்கு முன்பு இருந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடம் அந்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர்.அதேபோல் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றம்செய்யுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மீள்குடியேறத் தயாராக உள்ள மக்களின் பெயர்விபரங்களும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன.எனவே அந்துமக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்தினார்.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் வலியுறுத்தியதையடுத்து, இந்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் மீள்குடியேற்றம்தொடர்பாக விசேட கூட்டமொன்றை ஒழுங்குசெய்யுமாறு இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள ஏ.சி.பாம் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கவனஞ்செலுத்தவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement