• Apr 18 2026

புல்மோட்டை கனிய மணல் ஊழியர்கள் போராட்டம்!

shanu / Dec 24th 2025, 4:26 pm
image

திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் .


300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.


இன்று மாலைக்குள் ஊழியர்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வு தருவதாக அறிவித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கனிய மணலை ஏற்றுவதற்கு இடமளிக்கவில்லை எனவும் இதன் போது ஊழியர்கள் தெரிவித்தனர்.

புல்மோட்டை கனிய மணல் ஊழியர்கள் போராட்டம் திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் .300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.இன்று மாலைக்குள் ஊழியர்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வு தருவதாக அறிவித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கனிய மணலை ஏற்றுவதற்கு இடமளிக்கவில்லை எனவும் இதன் போது ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement