• May 20 2026

பலஸ்தீன இனப்படுகொலையை உடன்நிறுத்து - கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

shanu / Jun 30th 2025, 4:57 pm
image

“பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் - யுத்தத்திற்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் கொழும்பு கொம்பனித்தெருவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சுதந்திர பாலஸ்தீனத்திற்கான இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவிலான மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


பாலஸ்தீன இனப்படுகொலையை உடன்நிறுத்து என்ற கருப்பொருளில்  இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இது  அமைந்தது.  


கொழும்பு கொம்பனித்தெரு மைதானத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  கொழும்பு -03 கொல்லுப்பிட்டியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் வரை நடைபவனியாக சென்றுள்ளது.

பலஸ்தீன இனப்படுகொலையை உடன்நிறுத்து - கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் “பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் - யுத்தத்திற்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் கொழும்பு கொம்பனித்தெருவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சுதந்திர பாலஸ்தீனத்திற்கான இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவிலான மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாலஸ்தீன இனப்படுகொலையை உடன்நிறுத்து என்ற கருப்பொருளில்  இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இது  அமைந்தது.  கொழும்பு கொம்பனித்தெரு மைதானத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  கொழும்பு -03 கொல்லுப்பிட்டியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் வரை நடைபவனியாக சென்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement