நாடளாவிய ரீதியில் 10 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆரம்பக் கட்டப் பணிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஆரம்பமாகியுள்ளன.
இதன் ஒரு அங்கமாக, வவுனியா மாவட்டத்தில் இதற்கான பணிகள் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவின் கீழ் அமைந்துள்ள வீட்டில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டப் புள்ளியியலாளர் சி.ஜேவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் நா.கமலதாசன், வவுனியா நகரம், நெடுங்கேணி, செட்டிக்குளம் பிரதேச செயலாளர்கள், பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் புள்ளியியல் உத்தியோகத்தர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் பொருளாதாரக் கணக்கெடுப்பின் ஆரம்பப் பணிகள் தொடக்கம் நாடளாவிய ரீதியில் 10 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆரம்பக் கட்டப் பணிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஆரம்பமாகியுள்ளன.இதன் ஒரு அங்கமாக, வவுனியா மாவட்டத்தில் இதற்கான பணிகள் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவின் கீழ் அமைந்துள்ள வீட்டில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்டப் புள்ளியியலாளர் சி.ஜேவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் பி. ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலாளர் நா.கமலதாசன், வவுனியா நகரம், நெடுங்கேணி, செட்டிக்குளம் பிரதேச செயலாளர்கள், பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் புள்ளியியல் உத்தியோகத்தர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.