யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் சம்பந்தப்பட்ட வழக்கில், சாட்சியங்களின் மேலதிக விசாரணையை 2027 பிப்ரவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
2011ஆம் ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் தனது சாட்சியத்தை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் போயிருந்தனர்.
குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பில் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது, சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துவிட்டமையால் சில விடயங்கள் தமக்கு நினைவில் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியிடம் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம்; மீண்டும் விசாரணை வளையத்தில் கோட்டாபய யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் சம்பந்தப்பட்ட வழக்கில், சாட்சியங்களின் மேலதிக விசாரணையை 2027 பிப்ரவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.2011ஆம் ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் தனது சாட்சியத்தை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் போயிருந்தனர்.குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.இந்த வழக்கு தொடர்பில் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.இதன்போது, சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துவிட்டமையால் சில விடயங்கள் தமக்கு நினைவில் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியிடம் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.