கொமர்ஷல் வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவு மற்றும் புதுக்குடியிருப்பு கால்நடை வளர்போர் கூட்டுறவு சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழா புதுக்குடியிருப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இன்றையதினம் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு இன்று (20) காலை 11 மணியளவில் ஆரம்பமாகிய பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் அ.ஜெயபாலன், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி டென்சியா கிரிதரன் , கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் க.திசாகரன், பொதுச் சுகாதார பரிசோதகர் ந. கோகுலன்,புதுக்குடியிருப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.பிரதீபராசா மற்றும் புதுக்குடியிருப்பு கொமர்ஷல் வங்கி கிளை முகாமையாளர் ஈ.மகேந்திரன், உத்தியோகத்தர்கள், கொமர்ஷல் வங்கி அபிவிருத்தி கடன் பிரிவு உத்தியோகத்தர்கள் ,சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு கால்நடை வளர்போர் கூட்டுறவு சங்கத்தின் பெயர் பலகை கலந்து கொண்ட அதிதிகளால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டிருந்ததுடன் தேங்காய் திருவுதல்,முட்டியுடைத்தல், கயிறிழுத்தல். போன்ற கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றுருந்ததுடன், சங்க உறுப்பினர்களின் 25 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.
அத்தோடு சிறந்த பண்ணையாளர்கள் 20 பேருக்கான கௌரவிப்பு,பணியாளர்கள் கௌரவிப்பு,கலாசார நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, இடம்பெற்றிருந்ததுடன் இறுதியில் பசுமைப்புரட்சியை ஊக்குவிக்கும் முகமாக சங்க வளாகத்தில் மரநடுகையும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தில் பொங்கல் விழா கொமர்ஷல் வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவு மற்றும் புதுக்குடியிருப்பு கால்நடை வளர்போர் கூட்டுறவு சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழா புதுக்குடியிருப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இன்றையதினம் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.குறித்த நிகழ்வு இன்று (20) காலை 11 மணியளவில் ஆரம்பமாகிய பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் அ.ஜெயபாலன், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி டென்சியா கிரிதரன் , கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் க.திசாகரன், பொதுச் சுகாதார பரிசோதகர் ந. கோகுலன்,புதுக்குடியிருப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.பிரதீபராசா மற்றும் புதுக்குடியிருப்பு கொமர்ஷல் வங்கி கிளை முகாமையாளர் ஈ.மகேந்திரன், உத்தியோகத்தர்கள், கொமர்ஷல் வங்கி அபிவிருத்தி கடன் பிரிவு உத்தியோகத்தர்கள் ,சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு கால்நடை வளர்போர் கூட்டுறவு சங்கத்தின் பெயர் பலகை கலந்து கொண்ட அதிதிகளால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டிருந்ததுடன் தேங்காய் திருவுதல்,முட்டியுடைத்தல், கயிறிழுத்தல். போன்ற கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றுருந்ததுடன், சங்க உறுப்பினர்களின் 25 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.அத்தோடு சிறந்த பண்ணையாளர்கள் 20 பேருக்கான கௌரவிப்பு,பணியாளர்கள் கௌரவிப்பு,கலாசார நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, இடம்பெற்றிருந்ததுடன் இறுதியில் பசுமைப்புரட்சியை ஊக்குவிக்கும் முகமாக சங்க வளாகத்தில் மரநடுகையும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.