டித்வா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனதாகச் சந்தேகிக்கப்படும், ஆண் ஒருவரது சடலம் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
05.12.2025 அன்று வாகரை பொலிஸ் பகுதிக்குட்பட்ட கஜுவத்த கடற்படை முகாமிற்கு பின்னாலுள்ள கடற்கரை அண்டிய பகுதியில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இச்சடலம் தற்போது வாழச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அல்லது வெலிக்கந்தை புணாணை, கிரான், அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ப்பகுதியிலாவது பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் யாராவது காணாமல் போனால் இத்தகவலைத் தெரியப்படுத்தி சடலத்தை அடையாளம் காண உதவுமாறு திடீர் மரண விசாரணையாளர் சபாபதிபிள்ளை இராசகுமார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
21 நாட்களுக்குள் சடலம் இனம் காணப்படாமல் விட்டால் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சீரற்ற காலநிலையால் கரையொதுங்கிய சடலம் 21 நாட்களுக்குள் இனம் காணுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள். டித்வா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனதாகச் சந்தேகிக்கப்படும், ஆண் ஒருவரது சடலம் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 05.12.2025 அன்று வாகரை பொலிஸ் பகுதிக்குட்பட்ட கஜுவத்த கடற்படை முகாமிற்கு பின்னாலுள்ள கடற்கரை அண்டிய பகுதியில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இச்சடலம் தற்போது வாழச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வாகரை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அல்லது வெலிக்கந்தை புணாணை, கிரான், அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ப்பகுதியிலாவது பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் யாராவது காணாமல் போனால் இத்தகவலைத் தெரியப்படுத்தி சடலத்தை அடையாளம் காண உதவுமாறு திடீர் மரண விசாரணையாளர் சபாபதிபிள்ளை இராசகுமார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் 21 நாட்களுக்குள் சடலம் இனம் காணப்படாமல் விட்டால் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்