• Apr 17 2026

ஓடுபாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம் - தெறித்து ஓடிய பயணிகள்!

shanu / Dec 5th 2025, 3:39 pm
image

பிரேசிலில் விமானமொன்று புறப்படத் தயாராகவிருந்த ஓடுபாதையில் தீப்பிடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது.  


பிரேசிலின் LATAM ஏர்லைன்ஸ் க்குச் சொந்தமான ஏர்பஸ் A320 விமானமே  ஓடுபாதையில்  தீப்பிடித்தது. 


குறித்த விமானத்தில் 180  பயணிகள் புறப்படத் தயாராகவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானம்  திடீரென புகையால் நிரம்பியது.  அப்போது பயணிகள் ஜன்னல்கள் வழியாக இறக்கையின் கீழ் தீப்பிழம்புகளைக் கண்டனர்.


தீ விபத்தையடுத்து 180 பேரையும் அவசரமாக வெளியேற்றும் பணியை அதிகாரிகள் உடனே ஆரம்பித்தனர். 


பயணிகள் ஊதப்பட்ட சரிவுகளில் இருந்து கீழே விழுந்து தார் சாலையைக் கடந்து ஓடினர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. எனினும் விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. 


தீவிபத்தையடுத்து அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதால் நடக்கவிருந்த பேரழிவு தடுக்கப்பட்டது. 180 பயணிகளுடன் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மீண்டும் ஏர் இந்தியா விமான விபத்தை ஞாகப்படுத்துவதாக பதறவைத்துள்ளது.

ஓடுபாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம் - தெறித்து ஓடிய பயணிகள் பிரேசிலில் விமானமொன்று புறப்படத் தயாராகவிருந்த ஓடுபாதையில் தீப்பிடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது.  பிரேசிலின் LATAM ஏர்லைன்ஸ் க்குச் சொந்தமான ஏர்பஸ் A320 விமானமே  ஓடுபாதையில்  தீப்பிடித்தது. குறித்த விமானத்தில் 180  பயணிகள் புறப்படத் தயாராகவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானம்  திடீரென புகையால் நிரம்பியது.  அப்போது பயணிகள் ஜன்னல்கள் வழியாக இறக்கையின் கீழ் தீப்பிழம்புகளைக் கண்டனர்.தீ விபத்தையடுத்து 180 பேரையும் அவசரமாக வெளியேற்றும் பணியை அதிகாரிகள் உடனே ஆரம்பித்தனர். பயணிகள் ஊதப்பட்ட சரிவுகளில் இருந்து கீழே விழுந்து தார் சாலையைக் கடந்து ஓடினர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. எனினும் விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்தையடுத்து அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதால் நடக்கவிருந்த பேரழிவு தடுக்கப்பட்டது. 180 பயணிகளுடன் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் மீண்டும் ஏர் இந்தியா விமான விபத்தை ஞாகப்படுத்துவதாக பதறவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement