லிபியாவிற்குத் திரும்பிய தனியார் ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இடம்பெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா இராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் உள்ளிட்ட 8 பேருடன் தனியார் ஜெட் விமானம் பயணித்தது.
துருக்கியின் அங்காராவிலிருந்து லிபியாவின் திரிபோலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே விமானம் விபத்திற்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, விமானத்தின் எரிபொருளை வெளியேற்றிவிட்டு அவசரமாகத் தரையிறக்க முயற்சி செய்துள்ளனர்.
எனினும், தரையிறங்குவதற்கு முன்னரே விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில்,
அங்காராவிற்கு உத்தியோக பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது இராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது.
இந்த சோகமான விபத்தில் இராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.
தொழில்நுட்பக்கோளாறால் விபத்திற்குள்ளான விமானம்; 8 பேர் உயிரிழப்பு - லிபியாவில் துயரம் லிபியாவிற்குத் திரும்பிய தனியார் ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியில் இடம்பெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா இராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் உள்ளிட்ட 8 பேருடன் தனியார் ஜெட் விமானம் பயணித்தது. துருக்கியின் அங்காராவிலிருந்து லிபியாவின் திரிபோலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே விமானம் விபத்திற்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, விமானத்தின் எரிபொருளை வெளியேற்றிவிட்டு அவசரமாகத் தரையிறக்க முயற்சி செய்துள்ளனர். எனினும், தரையிறங்குவதற்கு முன்னரே விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில்,அங்காராவிற்கு உத்தியோக பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது இராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சோகமான விபத்தில் இராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.