• Jun 01 2026

நுவரெலியாவில் தனியார் பேருந்து பயணசீட்டை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க பயணிகள் புகார்!

Ziya / Jun 1st 2026, 2:58 pm
image

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் பல பகுதிகளில் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் முறையாக பயணசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.


குறிப்பாக அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தும் போது பல பகுதிகளில் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவிட படுவதாகவும் பயணிகளுக்கு முறையாக எஞ்சிய பணம் வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.


நுவரெலியா மாவட்டத்தில் குறுந்தூர நெடுந்தூரம் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம் பெற்று வருகின்றன.


குறிப்பாக நகர் பகுதியில் இருந்து கிராம தோட்ட பகுதியில் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம் பெற்று வருகின்றன அத்துடன் பேருந்துகளில் நடத்துனராக பணியில் ஈடுபட்டு வரும் ஒரு சில பேருந்துகளில் முறையான நடத்துனர்களை சேவையில் அமர்த்த படுவது இல்லை இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் அறவிட படுவதை தவிர்க்க கட்டாயம் பயண சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சுற்றி வளைப்பை மேற் கொண்டு பயண சீட்டு வழங்காமல் சேவையில் ஈடு பட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நுவரெலியாவில் தனியார் பேருந்து பயணசீட்டை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க பயணிகள் புகார் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் பல பகுதிகளில் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் முறையாக பயணசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.குறிப்பாக அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தும் போது பல பகுதிகளில் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவிட படுவதாகவும் பயணிகளுக்கு முறையாக எஞ்சிய பணம் வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.நுவரெலியா மாவட்டத்தில் குறுந்தூர நெடுந்தூரம் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம் பெற்று வருகின்றன.குறிப்பாக நகர் பகுதியில் இருந்து கிராம தோட்ட பகுதியில் சேவையில் ஈடு பட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம் பெற்று வருகின்றன அத்துடன் பேருந்துகளில் நடத்துனராக பணியில் ஈடுபட்டு வரும் ஒரு சில பேருந்துகளில் முறையான நடத்துனர்களை சேவையில் அமர்த்த படுவது இல்லை இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் அறவிட படுவதை தவிர்க்க கட்டாயம் பயண சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சுற்றி வளைப்பை மேற் கொண்டு பயண சீட்டு வழங்காமல் சேவையில் ஈடு பட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement