மால்டாவிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்ற ஒரு விமானத்தில், பொதுவாகப் பைகளை வைக்கும் மேலடுக்கு பொதி அறையில், பயணி ஒருவர் தன்னைத்தானே ஒளித்துக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது 'gaetanino97' என்ற பெயரில் அறியப்படும் ஒரு டிக்டாக் உள்ளடக்க உருவாக்குநர், விமானத்தின் மேலடுக்கு பொதி அறையினுள் லாவகமாகப்படுத்துக் கொண்டார்.
அங்கிருந்தபடி "நேப்போலி" (Napoli) என அவர் உரக்கக் கத்துவதை ஏனைய பயணிகள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
பயணத்திற்கான கட்டணத்தைச் செலுத்த விரும்பாததாலேயே இப்படிச் செய்ததாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விமானத்தில் ஏறுவதற்கு ஏற்கனவே பயணச்சீட்டு எடுத்திருக்க வேண்டும் என்பதால், கட்டணத்தைத் தவிர்க்க இவ்வாறு செய்ததாக அவர் கூறுவது ஒரு விளம்பர உத்தியே என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே பொது இடங்களில் இடையூறு விளைவிப்பது போன்ற சர்ச்சைக்குரிய வீடியோக்களை இவர் வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், இவரை நிரந்தரமாகப் 'பறக்கத் தடை விதிக்கப்பட்டோர்'பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
விமானத்தில் சூட்கேஸ் வைக்கும் இடத்தில் ஒளிந்த பயணி- கட்டணத்தைத் தவிர்க்க முயற்சி https://www.facebook.com/share/v/1XdYXndBuP/மால்டாவிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்ற ஒரு விமானத்தில், பொதுவாகப் பைகளை வைக்கும் மேலடுக்கு பொதி அறையில், பயணி ஒருவர் தன்னைத்தானே ஒளித்துக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தின் போது 'gaetanino97' என்ற பெயரில் அறியப்படும் ஒரு டிக்டாக் உள்ளடக்க உருவாக்குநர், விமானத்தின் மேலடுக்கு பொதி அறையினுள் லாவகமாகப்படுத்துக் கொண்டார். அங்கிருந்தபடி "நேப்போலி" (Napoli) என அவர் உரக்கக் கத்துவதை ஏனைய பயணிகள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன.பயணத்திற்கான கட்டணத்தைச் செலுத்த விரும்பாததாலேயே இப்படிச் செய்ததாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை விமானத்தில் ஏறுவதற்கு ஏற்கனவே பயணச்சீட்டு எடுத்திருக்க வேண்டும் என்பதால், கட்டணத்தைத் தவிர்க்க இவ்வாறு செய்ததாக அவர் கூறுவது ஒரு விளம்பர உத்தியே என விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஏற்கனவே பொது இடங்களில் இடையூறு விளைவிப்பது போன்ற சர்ச்சைக்குரிய வீடியோக்களை இவர் வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால், இவரை நிரந்தரமாகப் 'பறக்கத் தடை விதிக்கப்பட்டோர்'பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.