2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுமாக இருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் - வெளியான விசேட அறிவிப்பு 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.கடந்த பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுமாக இருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.