• Apr 18 2026

புதனன்று ஜேர்மன் பறக்கிறார் ஜனாதிபதி அநுர

Chithra / Jun 8th 2025, 11:25 am
image

 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். 

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இந்த விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் உட்பட அந்நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் மற்றும் ஜேர்மன் வாழ் இலங்கை சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு உட்பட பொறுப்புக்கூறல் விடயங்களில் ஜேர்மனியும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற நிலையில்  ஜனாதிபதி அநுரவின் ஜேர்மனி விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதனன்று ஜேர்மன் பறக்கிறார் ஜனாதிபதி அநுர  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.மேலும் இந்த விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் உட்பட அந்நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் மற்றும் ஜேர்மன் வாழ் இலங்கை சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு உட்பட பொறுப்புக்கூறல் விடயங்களில் ஜேர்மனியும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற நிலையில்  ஜனாதிபதி அநுரவின் ஜேர்மனி விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement