மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நுவரெலியாவில் பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல்
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.
அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள போதிலும், நுவரெலியாவில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது .
நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினாலும், கையிருப்பில் இருந்த எரிபொருள் நிறைவுற்ற நிலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளதால், இன்று (23) காலை வெளி பிரதேசங்களில் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை நிறுத்தி நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன .
எனினும் நுவரெலியாவில் வழக்கம் போன்று பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இல்லை. காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளால் பதற்றம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நுவரெலியாவில் பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல்லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள போதிலும், நுவரெலியாவில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது .நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினாலும், கையிருப்பில் இருந்த எரிபொருள் நிறைவுற்ற நிலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளதால், இன்று (23) காலை வெளி பிரதேசங்களில் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை நிறுத்தி நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன .எனினும் நுவரெலியாவில் வழக்கம் போன்று பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.