சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை குறித்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த பயிற்சியின் போது, தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பான சட்டரீதியான கடப்பாடுகள் மற்றும் தகவல்களை மறைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய சட்ட விளைவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2025 ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு அமைய, நிதிக்குற்றங்களை ஒடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்டவை என சந்தேகிக்கப்படும் தகவல்களை அறிந்த எந்தவொரு நபரும் அல்லது அதிகாரியும் அத்தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பது சட்டப்படி கட்டாயமானதாகும்.
மேலும், தகவல்களைத் தன்னிச்சையாகப் புறக்கணிப்பது அல்லது வெளிப்படுத்தத் தவறுவது இந்தச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுவதுடன், அதற்காகக் கடுமையான சட்டத் தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், சட்டவிரோத நிதி வலையமைப்புகளைக் கண்டறிந்து அவற்றை முடக்கவும் பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைத்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் புதிய சட்டம்: அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை குறித்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியின் போது, தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பான சட்டரீதியான கடப்பாடுகள் மற்றும் தகவல்களை மறைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய சட்ட விளைவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2025 ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு அமைய, நிதிக்குற்றங்களை ஒடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்டவை என சந்தேகிக்கப்படும் தகவல்களை அறிந்த எந்தவொரு நபரும் அல்லது அதிகாரியும் அத்தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பது சட்டப்படி கட்டாயமானதாகும். மேலும், தகவல்களைத் தன்னிச்சையாகப் புறக்கணிப்பது அல்லது வெளிப்படுத்தத் தவறுவது இந்தச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுவதுடன், அதற்காகக் கடுமையான சட்டத் தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், சட்டவிரோத நிதி வலையமைப்புகளைக் கண்டறிந்து அவற்றை முடக்கவும் பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைத்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.