• Jul 08 2026

நீர்கொழும்பு சிறை மோதல்: ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்

Chithra / Jul 7th 2026, 1:13 pm
image


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்ற கைதி பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


மேலும், 2016 ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அவரது உதவியாளரையும் தாக்கி கட்டிவைத்து, அங்கிருந்த தூபிக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன.


இவருக்கு எதிரான வழக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் மற்றுமொரு வழக்குக்காக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறுகிய கால தண்டனை கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் என 2,400-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தற்போது இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலை வளாகத்திலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

நீர்கொழும்பு சிறை மோதல்: ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ பூஸ்ஸ சிறைக்கு மாற்றம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்ற கைதி பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.மேலும், 2016 ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அவரது உதவியாளரையும் தாக்கி கட்டிவைத்து, அங்கிருந்த தூபிக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன.இவருக்கு எதிரான வழக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் மற்றுமொரு வழக்குக்காக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறுகிய கால தண்டனை கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் என 2,400-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.தற்போது இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலை வளாகத்திலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement