• May 21 2026

நெடுந்தீவு கடலில் 16,000,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கைப்பற்றிய கடற்படை!

shanu / Dec 5th 2025, 12:26 pm
image

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. 


அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தினால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன.


அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. 


கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடங்கிய இந்த தொகுதியை கடற்படை கைப்பற்றியதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நெடுந்தீவு கடலில் 16,000,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கைப்பற்றிய கடற்படை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தினால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன.அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடங்கிய இந்த தொகுதியை கடற்படை கைப்பற்றியதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement