அரசின் தேசிய செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரம் நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று (02) காலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்மல் விஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரம்: கந்தளாயில் விசேட விழிப்புணர்வு அரசின் தேசிய செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரம் நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இன்று (02) காலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்மல் விஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.