• May 20 2026

நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலை நினைவேந்தல்;ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு - யூரியூப்பர் ஒருவருக்கு மட்டும் அனுமதி!

shanu / Sep 22nd 2025, 5:18 pm
image

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.


இன்று காலை உணர்வுபூர்வமாக நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில்  நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தை செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள்,பொதுமக்கள்,அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


எனினும் ஊடகவியலாளர்களுக்கு  குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதியளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.


இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு 

அனுமதி மறுக்கப்படவில்லையென்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையிலும் நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபரால்  ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 


எனினும் அதிபரின் உறவினரான  வல்வெட்டித்துறையை சேர்ந்த யூரியூப்பர் ஒருவருக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் யூரியூப்பருக்கு அனுமதி வழங்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலை நினைவேந்தல்;ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு - யூரியூப்பர் ஒருவருக்கு மட்டும் அனுமதி நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.இன்று காலை உணர்வுபூர்வமாக நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில்  நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தை செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள்,பொதுமக்கள்,அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்எனினும் ஊடகவியலாளர்களுக்கு  குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதியளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லையென்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையிலும் நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபரால்  ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் அதிபரின் உறவினரான  வல்வெட்டித்துறையை சேர்ந்த யூரியூப்பர் ஒருவருக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் யூரியூப்பருக்கு அனுமதி வழங்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement