• Apr 22 2026

முத்து நகர் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக இழப்பு; 44 ஆவது நாள் தொடர் போராட்டம்

shanu / Oct 30th 2025, 8:05 pm
image


திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடராக 44 ஆவது நாட்களாக இன்றும்(30) சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு தொடராக தங்களுக்கு நீதி வேண்டியும் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள தரக்கோரியும் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர். 


இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் எங்களது விவசாய பூமியை தனியார் கம்பனிகளுக்கு சொளர் பவர் உற்பத்திகளுக்காக அநியாயமாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர்.இதற்காக பல முறை போராடியும் தீர்வுகளை வழங்க மறுக்கின்றனர். 


எங்கள் விவசாய பூமியை நம்பியே வாழ்ந்து வந்தோம் தற்போது ஜீவனோபாயம் நாசமாகியுள்ளது. இதனால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது முதல் தினம் தோரும் பொருளாதார கஷ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளோம். எனவே தீர்வை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி,பிரதமரிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர். 

முத்து நகர் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக இழப்பு; 44 ஆவது நாள் தொடர் போராட்டம் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடராக 44 ஆவது நாட்களாக இன்றும்(30) சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு தொடராக தங்களுக்கு நீதி வேண்டியும் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள தரக்கோரியும் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் எங்களது விவசாய பூமியை தனியார் கம்பனிகளுக்கு சொளர் பவர் உற்பத்திகளுக்காக அநியாயமாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர்.இதற்காக பல முறை போராடியும் தீர்வுகளை வழங்க மறுக்கின்றனர். எங்கள் விவசாய பூமியை நம்பியே வாழ்ந்து வந்தோம் தற்போது ஜீவனோபாயம் நாசமாகியுள்ளது. இதனால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது முதல் தினம் தோரும் பொருளாதார கஷ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளோம். எனவே தீர்வை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி,பிரதமரிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement