வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடக்கு மாகாண மாவட்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வூசூ போட்டி, சனிக்கிழமை வவுனியா ஓமந்தை விளையாட்டு உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண்கள் அணி முதலிடத்தையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி, பெண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
வவுனியா மாவட்ட பெண்கள் அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
அதேவேளை, ஆண்களுக்கான போட்டியில் வவுனியா மாவட்ட அணி முதலாம் இடத்தையும், முல்லைத்தீவு மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இதன்படி ஆண்கள் பிரிவில் மன்னார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்ட அணி நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இவ்வெற்றியின் மூலம் 2026 வடமாகாண வூசூ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் பெண்கள் பிரிவில் முதலிடத்தையும், ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
வூசூ களத்தில் முல்லைத்தீவின் ஆதிக்கம். பெண்கள் அணி முதலிடம் பிடித்து அசத்தல் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடக்கு மாகாண மாவட்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வூசூ போட்டி, சனிக்கிழமை வவுனியா ஓமந்தை விளையாட்டு உள்ளக அரங்கில் நடைபெற்றது.இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண்கள் அணி முதலிடத்தையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.அதன்படி, பெண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. வவுனியா மாவட்ட பெண்கள் அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.அதேவேளை, ஆண்களுக்கான போட்டியில் வவுனியா மாவட்ட அணி முதலாம் இடத்தையும், முல்லைத்தீவு மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இதன்படி ஆண்கள் பிரிவில் மன்னார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்ட அணி நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.இவ்வெற்றியின் மூலம் 2026 வடமாகாண வூசூ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் பெண்கள் பிரிவில் முதலிடத்தையும், ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.