• Apr 17 2026

பணக் கொடுக்கல் வாங்கல்: பாணந்துறையில் ஒருவர் படுகொலை

Chithra / Dec 9th 2025, 11:32 am
image


பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில்  நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நபர் ஒருவர், அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

சம்பவம் தொடர்பாக 54 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணக் கொடுக்கல் வாங்கல்: பாணந்துறையில் ஒருவர் படுகொலை பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில்  நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நபர் ஒருவர், அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக 54 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement