• Apr 21 2026

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நடமாடும் சேவை!

Ziya / Dec 18th 2025, 3:52 pm
image

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka)  திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் அனர்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இவ் நடமாடும் சேவை இன்று (18) காலை 9.30 – 3.00 மணி வரை பரந்தன் பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


இவ் நடமாடும் சேவையில் காணி, பிறப்பு இறப்புச் சான்றிதழ், சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் அனைத்து சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இடம்பெற்றது.


குறித்த நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமாலிகிதன் மற்றும் கிராமசேவகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


கிளிநொச்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நடமாடும் சேவை ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka)  திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் அனர்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இவ் நடமாடும் சேவை இன்று (18) காலை 9.30 – 3.00 மணி வரை பரந்தன் பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.இவ் நடமாடும் சேவையில் காணி, பிறப்பு இறப்புச் சான்றிதழ், சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் அனைத்து சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இடம்பெற்றது.குறித்த நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமாலிகிதன் மற்றும் கிராமசேவகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement