• Oct 16 2026

யாழ்ப்பாணத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் – சிக்கிய நபர்! பின்னணியில் அதிர்ச்சி

Chithra / Oct 16th 2026, 11:07 am
image


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இரண்டு மாடி வீடு மற்றும் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணம் என்பன முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய பாரவூர்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.


குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி இரண்டு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.


அத்துடன், ஆரம்பகட்ட கைது நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணம் தற்போது யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வீடு மற்றும் பணத்தை 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.


இந்த முடக்க உத்தரவு நேற்று (15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் – சிக்கிய நபர் பின்னணியில் அதிர்ச்சி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இரண்டு மாடி வீடு மற்றும் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணம் என்பன முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய பாரவூர்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி இரண்டு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.அத்துடன், ஆரம்பகட்ட கைது நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணம் தற்போது யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வீடு மற்றும் பணத்தை 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.இந்த முடக்க உத்தரவு நேற்று (15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement