• May 01 2026

யாழ். பொது நூலகத்தின் முன்பாக மே தினப் பேரணி!

shanu / May 1st 2026, 4:47 pm
image

​இலங்கையின் 137 ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சுதந்திர மனித உரிமை அமைப்பினால் (Freedom Human Rights Organization) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கவனயீர்ப்புப் பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக  நடைபெற்றது.


​தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


​நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக "தொழிலாளர்களைப் பாதுகாப்போம்", "தொழில் முயற்சியைப் பாராட்டுவோம்" போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


​இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான சுலோகங்கள் ஏந்தப்பட்டிருந்தன, இது இனங்களைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.


​நிகழ்வில் கத்தோலிக்க மதகுருமார் மற்றும் சமூகப் பெரியோர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தமது ஆதரவினை வழங்கினர்.

யாழ். பொது நூலகத்தின் முன்பாக மே தினப் பேரணி ​இலங்கையின் 137 ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சுதந்திர மனித உரிமை அமைப்பினால் (Freedom Human Rights Organization) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கவனயீர்ப்புப் பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக  நடைபெற்றது.​தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.​நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக "தொழிலாளர்களைப் பாதுகாப்போம்", "தொழில் முயற்சியைப் பாராட்டுவோம்" போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.​இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான சுலோகங்கள் ஏந்தப்பட்டிருந்தன, இது இனங்களைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.​நிகழ்வில் கத்தோலிக்க மதகுருமார் மற்றும் சமூகப் பெரியோர்கள் கலந்துகொண்டு தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தமது ஆதரவினை வழங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement