• May 21 2026

ஒரு மாதத்தில் திருமணம், அதற்கு முன் நேர்ந்த துயரம்! முல்லைத்தீவில் இளைஞன் பலி

Chithra / May 20th 2026, 12:37 pm
image

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


தகவலின்படி, கடந்த 18ஆம் திகதி இரவு ஆட்டிறைச்சி கறியுடன் உணவருந்தி உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலை தாயார் எழுப்பச் சென்றபோது விறைத்த நிலையில் காணப்பட்டுள்ளார். 


பின்னர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


பின்னர் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில் மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


உயிரிழந்த இளைஞனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதால், இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதேவேளை, இரவு நேரங்களில் அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை உட்கொண்ட உடனேயே உறங்கச் செல்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


எனினும், குறிப்பிட்ட இந்த உயிரிழப்புக்கும் உணவு உட்கொண்டதற்கும் நேரடி தொடர்பு இருப்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் திருமணம், அதற்கு முன் நேர்ந்த துயரம் முல்லைத்தீவில் இளைஞன் பலி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தகவலின்படி, கடந்த 18ஆம் திகதி இரவு ஆட்டிறைச்சி கறியுடன் உணவருந்தி உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலை தாயார் எழுப்பச் சென்றபோது விறைத்த நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில் மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.உயிரிழந்த இளைஞனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதால், இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை, இரவு நேரங்களில் அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை உட்கொண்ட உடனேயே உறங்கச் செல்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனினும், குறிப்பிட்ட இந்த உயிரிழப்புக்கும் உணவு உட்கொண்டதற்கும் நேரடி தொடர்பு இருப்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement