• Apr 23 2026

வவுனியாவின் பல காணிகள் இராணுவ முகாமாகவே உள்ளது; விடுவிப்பதற்கு ஆவன செய்வீர்களா? சபையில் சத்தியலிங்கம் எம்.பி கேள்வி!

shanu / Oct 23rd 2025, 12:52 pm
image

வவுனியாவில் உள்ள பல காணிகள் இராணுவ முகாம்களாகவே தற்போது வரை காணப்படுகின்றன. அவற்றை விடுவிப்பதற்கு  பரிந்துரை  செய்வீர்களா? என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலக் கேள்வியின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


வவுனியாவில் பல காணிகள் யுத்தத்திற்குப் பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் முகாம்களாக உள்ளன. இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கு  வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பரிந்துரை செய்வீர்களா என்று தெரிவித்துள்ளார். 


இதற்குப் பதிலளித்த அமைச்சர், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை வடக்கு - கிழக்கில் இராணுவத்திலிருந்த காணிகளில்  674 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போது வவுனியா காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார்.


வவுனியாவின் பல காணிகள் இராணுவ முகாமாகவே உள்ளது; விடுவிப்பதற்கு ஆவன செய்வீர்களா சபையில் சத்தியலிங்கம் எம்.பி கேள்வி வவுனியாவில் உள்ள பல காணிகள் இராணுவ முகாம்களாகவே தற்போது வரை காணப்படுகின்றன. அவற்றை விடுவிப்பதற்கு  பரிந்துரை  செய்வீர்களா என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலக் கேள்வியின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் பல காணிகள் யுத்தத்திற்குப் பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் முகாம்களாக உள்ளன. இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கு  வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பரிந்துரை செய்வீர்களா என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை வடக்கு - கிழக்கில் இராணுவத்திலிருந்த காணிகளில்  674 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போது வவுனியா காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement