• May 21 2026

வெள்ளத்தால் அழிந்த பல ஏக்கர் கச்சான் செய்கை; வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகள்

Chithra / Dec 5th 2025, 12:15 pm
image


 

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் நூறு ஏக்கருக்கும் அதிகமான கச்சான் செய்கைகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன.


இதனால், பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெரும் வாழ்வாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.


பூஅரசன் தீவு, கல்லடி வெட்டுவான் போன்ற பகுதிகளிலேயே கச்சான் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில், அண்மையில் நடந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பயிரிடப்பட்டிருந்த கச்சான் பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கிச் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


தங்கள் உழைப்பையும் முதலீட்டையும் இழந்து நிற்கும் இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உரிய அதிகாரிகள் மூலம் உடனடியாகத் தலையிட்டு வெள்ளச் சேதத்திற்கான இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.


வெள்ளத்தால் அழிந்த பல ஏக்கர் கச்சான் செய்கை; வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகள்  கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் நூறு ஏக்கருக்கும் அதிகமான கச்சான் செய்கைகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன.இதனால், பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெரும் வாழ்வாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.பூஅரசன் தீவு, கல்லடி வெட்டுவான் போன்ற பகுதிகளிலேயே கச்சான் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பயிரிடப்பட்டிருந்த கச்சான் பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கிச் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.தங்கள் உழைப்பையும் முதலீட்டையும் இழந்து நிற்கும் இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உரிய அதிகாரிகள் மூலம் உடனடியாகத் தலையிட்டு வெள்ளச் சேதத்திற்கான இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement