புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இலகுவாகக் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில், பிரதேச சபையின் உப தவிசாளர் சுந்தரம் பரந்தாமன் தலைமையில் வாராந்திர குறைகேள் சந்திப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கற்சிலைமடு, பேராறு, கூழாமுறிப்பு, தண்டுவான், ஒதியமலை, ஒட்டுசுட்டான் மற்றும் முத்தையன்கட்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பிரதேச சபை தொடர்பான தங்களது தேவைகள் மற்றும் குறைகளை முன்வைப்பதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒட்டுசுட்டான் உப அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்ள முடியும்.
அதேவேளை ஒலுமடு, மாங்குளம் மற்றும் திருமுறிகண்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒலுமடு உப அலுவலகத்தில் நடைபெறும் குறைகேள் சந்திப்பில் பங்கேற்கலாம்.
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் உப தவிசாளரின் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்நடைமுறையை அமுல்படுத்துவதற்கு எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளதுடன், இனிவரும் காலங்களிலும் வழமையாக இச்சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேசம் பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால், மக்கள் தூரப் பயணங்களை மேற்கொள்ளாமல் தங்களது தேவைகளை விரைவாக முன்வைத்து தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகளை இலகுபடுத்த புதிய குறைகேள் சந்திப்புகள் – புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னெடுப்பு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இலகுவாகக் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில், பிரதேச சபையின் உப தவிசாளர் சுந்தரம் பரந்தாமன் தலைமையில் வாராந்திர குறைகேள் சந்திப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி கற்சிலைமடு, பேராறு, கூழாமுறிப்பு, தண்டுவான், ஒதியமலை, ஒட்டுசுட்டான் மற்றும் முத்தையன்கட்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பிரதேச சபை தொடர்பான தங்களது தேவைகள் மற்றும் குறைகளை முன்வைப்பதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒட்டுசுட்டான் உப அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்ள முடியும்.அதேவேளை ஒலுமடு, மாங்குளம் மற்றும் திருமுறிகண்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒலுமடு உப அலுவலகத்தில் நடைபெறும் குறைகேள் சந்திப்பில் பங்கேற்கலாம்.மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் உப தவிசாளரின் சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்நடைமுறையை அமுல்படுத்துவதற்கு எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளதுடன், இனிவரும் காலங்களிலும் வழமையாக இச்சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேசம் பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால், மக்கள் தூரப் பயணங்களை மேற்கொள்ளாமல் தங்களது தேவைகளை விரைவாக முன்வைத்து தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தெரிவித்துள்ளார்.