அம்பலாந்தோட்டை – மாமடல, போகுடுயாய பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ நாளில், மூன்று பேர் கொண்ட குழு குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர், கொல்லப்பட்ட நபரின் தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவ இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை – அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபராக இருந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய கொலைச் சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை பழிவாங்கல் சம்பவமா அம்பலாந்தோட்டை – மாமடல, போகுடுயாய பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவ நாளில், மூன்று பேர் கொண்ட குழு குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர், கொல்லப்பட்ட நபரின் தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவ இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.கொல்லப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை – அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபராக இருந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னைய கொலைச் சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.