கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்பரப்பில் சடலம் ஒன்று மிதந்து காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு துறைமுக பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடைய இவர், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த போது கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு துறைமுகம் அருகே ஆண் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடற்பரப்பில் சடலம் ஒன்று மிதந்து காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு துறைமுக பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடைய இவர், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்த போது கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மீட்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.