தாராளவாத விசா கொள்கை; மோசடிக்காரர்களின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ள இலங்கை
தற்போதைய அரசாங்கம் முறையான தூரநோக்கோ அல்லது பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகளோ இன்றி முன்னெடுத்து வரும் தாராளவாத விசா கொள்கை காரணமாக, இலங்கை சர்வதேச விசா மற்றும் இணையவழி மோசடி கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
உலகளாவிய ரீதியில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் விசா கொள்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்தியதன் விளைவாக, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான கடந்த 5 மாத காலப்பகுதியில் மாத்திரம் இணையத்தளம் மூலமாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட 652 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிலைமை நடப்பு ஆண்டில் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், கைது செய்யப்பட்ட பல வெளிநாட்டவர்களின் விசா மற்றும் கடவுச்சீட்டுகள் காலாவதியாகியுள்ளதோடு, சிலருக்கு தங்களது அடையாளத்தையோ அல்லது நாட்டிற்குள் நுழைந்ததற்கான காரணத்தையோ கூட உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்தார்.
'வருகை விசா' (On-arrival visa) மூலம் நாட்டிற்குள் நுழைந்த பெருமளவிலானோரே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தியாவின் விசா நடைமுறைகள் கடுமையானவை என்பதால் அங்கு இவ்வாறான மோசடிகள் குறைவு எனவும் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கம் வெறும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டும் குறுகிய நோக்கில் நாட்டை மோசடிக்காரர்களின் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளதாக சாடினார்.
இதேபோன்றதொரு ஆபத்தான விசா தளர்வுக் கொள்கையையே இஸ்ரேலியர்கள் விடயத்திலும் அரசாங்கம் கையாண்டுள்ளதாகத் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், உலக நாடுகள் பல இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்து வரும் பின்னணியில், விசா கட்டணங்களின்றி இஸ்ரேலியர்களை நாட்டிற்குள் அனுமதிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால் பெருமளவிலான இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகக் கூறினார்.
அவர்கள் இலங்கையில் சட்டவிரோத மையங்களை நிறுவியுள்ளதாக பிரதமர் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அவர்கள் அருகம்பை (Arugam Bay) உள்ளிட்ட முக்கிய சுற்றுலாப் பகுதிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வியாபாரங்களை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளால் நாட்டின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் கங்கம் ஏற்பட்டால், உண்மையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த விசா கொள்கை உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அரசாங்கத்தின் நிர்வாகத் திறமை குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியினர் அண்மைக் காலமாக எதிர்க்கட்சியிலுள்ள திறமையானவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப்போவதாகக் கூறி வருவதானது, தற்போதைய அரசாங்கத்திலுள்ள 159 பேரில் பெரும்பாலானோருக்கு எந்தவொரு அனுபவமும் இல்லை மற்றும் வேலை செய்யத் தெரியாது என்பதை அவர்களின் கூற்றே நிரூபிப்பதாகக் கூறினார்.
ஜனாதிபதி முன்னர் எதிர்க்கட்சியை 'காட்டுச்செடிகள்' என்றும் அரசாங்கத்தை 'மலர்தொட்டிகள்' என்றும் வர்ணித்ததை நினைவுபடுத்திய அவர், இன்று அரசாங்கத்தின் மலர்தொட்டிகள் யாவும் தொட்டாசிணுங்கிச் செடிகளாக மாறியுள்ளதாக எள்ளி நகையாடினார்.
அத்துடன் அரசாங்கத்திடம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமான பொருளாதாரத் திட்டங்களோ அல்லது நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் உத்திகளோ இல்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தை (IMF) மட்டும் நம்பி நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது, அது தற்காலிகமான ஒரு நிவாரணம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பலவீனமான மேலாண்மை காரணமாக உலகில் எந்தவொரு நாடும் கொள்வனவு செய்யாத அதிகபட்ச விலையான 326 டொலருக்கு இலங்கை ஒரு பேரல் டீசலை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் 90 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் உள்ளதாக ஜனாதிபதி கூறும் பின்னணியில், ஏன் இவ்வளவு அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யப்பட்டது என்பதை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்படவுள்ளமை தெளிவாகிறது என்றும் கூறினார்.
அதேபோன்று, நிலக்கரி இறக்குமதியில் பாரிய ஊழல் நடந்துள்ளதாக தணிக்கவாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் மின்சார சபையின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதோடு, கொண்டுவரப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடந்துள்ள இந்த நிலக்கரி ஊழலை மூடிமறைக்கவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த கால ஊழல்களை ஆராய ஜனாதிபதிக்கு ஆரம்பத்தில் ஆர்வம் இருக்கவில்லை என்றும், தற்போதைய ஊழலை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் தேவையில்லை, புதிய லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் மூலமே இதனை முறையாக விசாரிக்க முடியும் என்பதால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அடுத்த வாரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
தாராளவாத விசா கொள்கை; மோசடிக்காரர்களின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ள இலங்கை தாராளவாத விசா கொள்கை; மோசடிக்காரர்களின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ள இலங்கை தற்போதைய அரசாங்கம் முறையான தூரநோக்கோ அல்லது பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகளோ இன்றி முன்னெடுத்து வரும் தாராளவாத விசா கொள்கை காரணமாக, இலங்கை சர்வதேச விசா மற்றும் இணையவழி மோசடி கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், உலகளாவிய ரீதியில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் விசா கொள்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்தியதன் விளைவாக, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான கடந்த 5 மாத காலப்பகுதியில் மாத்திரம் இணையத்தளம் மூலமாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட 652 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிலைமை நடப்பு ஆண்டில் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், கைது செய்யப்பட்ட பல வெளிநாட்டவர்களின் விசா மற்றும் கடவுச்சீட்டுகள் காலாவதியாகியுள்ளதோடு, சிலருக்கு தங்களது அடையாளத்தையோ அல்லது நாட்டிற்குள் நுழைந்ததற்கான காரணத்தையோ கூட உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்தார். 'வருகை விசா' (On-arrival visa) மூலம் நாட்டிற்குள் நுழைந்த பெருமளவிலானோரே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தியாவின் விசா நடைமுறைகள் கடுமையானவை என்பதால் அங்கு இவ்வாறான மோசடிகள் குறைவு எனவும் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கம் வெறும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டும் குறுகிய நோக்கில் நாட்டை மோசடிக்காரர்களின் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளதாக சாடினார்.இதேபோன்றதொரு ஆபத்தான விசா தளர்வுக் கொள்கையையே இஸ்ரேலியர்கள் விடயத்திலும் அரசாங்கம் கையாண்டுள்ளதாகத் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், உலக நாடுகள் பல இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்து வரும் பின்னணியில், விசா கட்டணங்களின்றி இஸ்ரேலியர்களை நாட்டிற்குள் அனுமதிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால் பெருமளவிலான இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகக் கூறினார். அவர்கள் இலங்கையில் சட்டவிரோத மையங்களை நிறுவியுள்ளதாக பிரதமர் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அவர்கள் அருகம்பை (Arugam Bay) உள்ளிட்ட முக்கிய சுற்றுலாப் பகுதிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வியாபாரங்களை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளால் நாட்டின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் கங்கம் ஏற்பட்டால், உண்மையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த விசா கொள்கை உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.தொடர்ந்து அரசாங்கத்தின் நிர்வாகத் திறமை குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியினர் அண்மைக் காலமாக எதிர்க்கட்சியிலுள்ள திறமையானவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப்போவதாகக் கூறி வருவதானது, தற்போதைய அரசாங்கத்திலுள்ள 159 பேரில் பெரும்பாலானோருக்கு எந்தவொரு அனுபவமும் இல்லை மற்றும் வேலை செய்யத் தெரியாது என்பதை அவர்களின் கூற்றே நிரூபிப்பதாகக் கூறினார். ஜனாதிபதி முன்னர் எதிர்க்கட்சியை 'காட்டுச்செடிகள்' என்றும் அரசாங்கத்தை 'மலர்தொட்டிகள்' என்றும் வர்ணித்ததை நினைவுபடுத்திய அவர், இன்று அரசாங்கத்தின் மலர்தொட்டிகள் யாவும் தொட்டாசிணுங்கிச் செடிகளாக மாறியுள்ளதாக எள்ளி நகையாடினார். அத்துடன் அரசாங்கத்திடம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமான பொருளாதாரத் திட்டங்களோ அல்லது நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் உத்திகளோ இல்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தை (IMF) மட்டும் நம்பி நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது, அது தற்காலிகமான ஒரு நிவாரணம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.அரசாங்கத்தின் பலவீனமான மேலாண்மை காரணமாக உலகில் எந்தவொரு நாடும் கொள்வனவு செய்யாத அதிகபட்ச விலையான 326 டொலருக்கு இலங்கை ஒரு பேரல் டீசலை கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் 90 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் உள்ளதாக ஜனாதிபதி கூறும் பின்னணியில், ஏன் இவ்வளவு அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யப்பட்டது என்பதை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்படவுள்ளமை தெளிவாகிறது என்றும் கூறினார். அதேபோன்று, நிலக்கரி இறக்குமதியில் பாரிய ஊழல் நடந்துள்ளதாக தணிக்கவாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் மின்சார சபையின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதோடு, கொண்டுவரப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடந்துள்ள இந்த நிலக்கரி ஊழலை மூடிமறைக்கவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த கால ஊழல்களை ஆராய ஜனாதிபதிக்கு ஆரம்பத்தில் ஆர்வம் இருக்கவில்லை என்றும், தற்போதைய ஊழலை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் தேவையில்லை, புதிய லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் மூலமே இதனை முறையாக விசாரிக்க முடியும் என்பதால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அடுத்த வாரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.