• May 06 2026

நாட்டில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை.! பொது மக்களுக்கு முக்கிய தகவல்

Aathira / Feb 21st 2026, 10:28 am
image

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (21) முற்பகல் 08.00 மணி முதல் நாளை (22) முற்பகல் 08.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவதானத்துடன் (Level 1) இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகெட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை. பொது மக்களுக்கு முக்கிய தகவல் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (21) முற்பகல் 08.00 மணி முதல் நாளை (22) முற்பகல் 08.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவதானத்துடன் (Level 1) இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகெட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement