குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் பல வருடங்களாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி தவித்து வந்த மக்களின் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. 33 பயனாளிகளுக்குக் காணி அனுமதிப்பத்திரங்களும், அரசின் 'உருமய' திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்குக் காணி உறுதிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.
குச்சவெளி பிரதேச செயலாளர் யூ. எல். சியாஉல் ஹக் தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காணி உரிமங்களை வழங்கி வைத்தார்.
காணி உரிமங்கள் மட்டுமன்றி, மக்களின் அத்தியாவசிய ஆரோக்கியத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதியின் நிதியத்திலிருந்து புல்மோட்டை மற்றும் இரக்கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக மொத்தம் ரூபா 5,50,000 (5.5 லட்சம்) பெறுமதியான நிதி உதவியும் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர், 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தங்களின் பல ஆண்டுகாலக் காணி உரிமைக் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உறுதிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் அரசாங்கத்திற்கும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
"சொந்தக் காணி உரிமை பெற்ற குச்சவெளி மக்கள்": நெகிழ்ச்சியுடன் அரசுக்கு நன்றி தெரிவிப்பு குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் பல வருடங்களாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி தவித்து வந்த மக்களின் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. 33 பயனாளிகளுக்குக் காணி அனுமதிப்பத்திரங்களும், அரசின் 'உருமய' திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்குக் காணி உறுதிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.குச்சவெளி பிரதேச செயலாளர் யூ. எல். சியாஉல் ஹக் தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காணி உரிமங்களை வழங்கி வைத்தார்.காணி உரிமங்கள் மட்டுமன்றி, மக்களின் அத்தியாவசிய ஆரோக்கியத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதியின் நிதியத்திலிருந்து புல்மோட்டை மற்றும் இரக்கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக மொத்தம் ரூபா 5,50,000 (5.5 லட்சம்) பெறுமதியான நிதி உதவியும் இதன்போது கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர், 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.தங்களின் பல ஆண்டுகாலக் காணி உரிமைக் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உறுதிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் அரசாங்கத்திற்கும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.