• May 18 2026

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் உள்ளிட்டோர் கள விஜயம்!

shanu / Dec 26th 2025, 4:32 pm
image

டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளை ஆராய்யும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி மற்றும்  பாடவிதான உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர் உள்ளிட்டோர் மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குட்பட்ட பகுதிகளில் கள விஜயத்தினை மேற்கொண்டனர்.


கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி கருத்து தெரிவிக்கையில் டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. கபில நிறத்தத்திகளின் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. 


விவசாயிகள் சிபார்சு செய்த மருந்துகளை விவசாய போதனாசிரியரின் அறிவுறுத்தலுக்கமைய விசுறி கட்டுப்படுத்த வேண்டும். நெற்பயிர்களில் மஞ்சலாதல் அவதானிக்க முடிகின்றது. 


மஞ்சலாதலுக்கான காரணங்களை தொடர்ச்சியாக அவதானித்து விவசாயிகள் இனங்காண வேண்டும் பூச்சி தாக்கம் ,பங்கசு தாக்கம், போசணை பற்றாக்குறை போன்றவற்றினாலும் மஞ்சலாதல் ஏற்படும் என தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் உள்ளிட்டோர் கள விஜயம் டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளை ஆராய்யும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி மற்றும்  பாடவிதான உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர் உள்ளிட்டோர் மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குட்பட்ட பகுதிகளில் கள விஜயத்தினை மேற்கொண்டனர்.கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி கருத்து தெரிவிக்கையில் டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. கபில நிறத்தத்திகளின் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. விவசாயிகள் சிபார்சு செய்த மருந்துகளை விவசாய போதனாசிரியரின் அறிவுறுத்தலுக்கமைய விசுறி கட்டுப்படுத்த வேண்டும். நெற்பயிர்களில் மஞ்சலாதல் அவதானிக்க முடிகின்றது. மஞ்சலாதலுக்கான காரணங்களை தொடர்ச்சியாக அவதானித்து விவசாயிகள் இனங்காண வேண்டும் பூச்சி தாக்கம் ,பங்கசு தாக்கம், போசணை பற்றாக்குறை போன்றவற்றினாலும் மஞ்சலாதல் ஏற்படும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement