• May 09 2026

கபில சந்திரசேன மர்ம மரணம் - கோட்டை நீதவான் கள பரிசோதனை

Chithra / May 8th 2026, 1:07 pm
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன  உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் அவர் உயிர் மாய்த்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று (08) கோட்டை நீதவான் பசந் அமரசேனவிடம் விடயங்களை முன்வைத்தனர்.


அவரது மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால், இது குறித்து சட்ட மருத்துவ அதிகாரியின் மரணப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை அவசியமென பொலிஸார்  நீதிமன்றில் தெரிவித்தனர்.


நீதவான் விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் தற்போது கொள்ளுப்பிட்டியிலுள்ள குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளமையால், நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.


அத்துடன், மரணம் இடம்பெற்ற இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகியோர் விஜயம் செய்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.


இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


2013-ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 10 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேனா, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


சந்திரசேனா தனது மனைவியின் பெயரில் புருனேயில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, அந்த இலஞ்சப் பணத்தை அதன் சிங்கப்பூர் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்ததாக  அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


இதையடுத்து   தேசிய விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் போது  2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மார்ச் 12 அன்று கைது செய்யப்பட்ட சந்திரசேனவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 5 ஆம் திகதி  பிணை வழங்கியிருந்தது.


அப்போது, ​​சந்தேக நபரை 5 லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10  ரூபா லட்சம் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.


இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 


கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. 


இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், 1997-ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் கீழ் அவரது பிணையை இரத்து செய்து, சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டார். 


இந்த உத்தரவைப் பிறப்பித்த பிரதம நீதவான், இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளை உடனடியாக அதைச் செயல்படுத்துமாறும் பணித்துள்ளார்.


இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கபில சந்திரசேன மர்ம மரணம் - கோட்டை நீதவான் கள பரிசோதனை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன  உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் அவர் உயிர் மாய்த்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று (08) கோட்டை நீதவான் பசந் அமரசேனவிடம் விடயங்களை முன்வைத்தனர்.அவரது மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால், இது குறித்து சட்ட மருத்துவ அதிகாரியின் மரணப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை அவசியமென பொலிஸார்  நீதிமன்றில் தெரிவித்தனர்.நீதவான் விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் தற்போது கொள்ளுப்பிட்டியிலுள்ள குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளமையால், நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.அத்துடன், மரணம் இடம்பெற்ற இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகியோர் விஜயம் செய்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2013-ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 10 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேனா, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.சந்திரசேனா தனது மனைவியின் பெயரில் புருனேயில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, அந்த இலஞ்சப் பணத்தை அதன் சிங்கப்பூர் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்ததாக  அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து   தேசிய விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் போது  2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மார்ச் 12 அன்று கைது செய்யப்பட்ட சந்திரசேனவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 5 ஆம் திகதி  பிணை வழங்கியிருந்தது.அப்போது, ​​சந்தேக நபரை 5 லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10  ரூபா லட்சம் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், 1997-ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் கீழ் அவரது பிணையை இரத்து செய்து, சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைப் பிறப்பித்த பிரதம நீதவான், இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளை உடனடியாக அதைச் செயல்படுத்துமாறும் பணித்துள்ளார்.இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement