யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம் (KKS) விரிவான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது.
இதற்கான முன்னோட்ட நடவடிக்கையாக இன்றைய தினம் துறைமுக வளாகத்தில் விசேட களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த களவிஜயம் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையில் நடைபெற்றது.
இதில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி, அமைச்சின் அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள ஆய்வின் போது துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான புவியியல், கடல்சார் மற்றும் கட்டமைப்பு சார்ந்த சூழ்நிலைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தி திட்டம் வடக்கு மாகாண மக்களுக்கு பாரிய பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடல்சார் வர்த்தகம், வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, வடக்கு மாகாணத்தை சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இணைக்கும் புதிய பொருளாதார வாயிலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகம் (KKS) விரிவான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான முன்னோட்ட நடவடிக்கையாக இன்றைய தினம் துறைமுக வளாகத்தில் விசேட களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.இந்த களவிஜயம் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையில் நடைபெற்றது. இதில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி, அமைச்சின் அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கள ஆய்வின் போது துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான புவியியல், கடல்சார் மற்றும் கட்டமைப்பு சார்ந்த சூழ்நிலைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தி திட்டம் வடக்கு மாகாண மக்களுக்கு பாரிய பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டம் இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.வடக்கு மாகாணத்தில் கடல்சார் வர்த்தகம், வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, வடக்கு மாகாணத்தை சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இணைக்கும் புதிய பொருளாதார வாயிலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.