• Aug 18 2026

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: பெண் உட்பட 5 ஐவர் கைது

Chithra / Aug 18th 2026, 10:15 am
image


மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான ‘கஞ்சிபானை இம்ரான்’ என்பவரின் நெருங்கிய உறவினராகக் கருதப்படும் மொஹமட் அஸ்மின் மொஹிதீன், 

கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.


இந்தக் கொலைச் சம்பவத்தை பிரான்சில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான ‘கூடு அஞ்சு’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐவர் நேற்று (17) காலை மற்றும் நண்பகல் வேளைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதான ஆண் ஒருவரும் 23 வயதான பெண் ஒருவரும் 25 கிராம் 840 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று ஆண் சந்தேகநபர்கள் 12 கிராம் 380 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, இரத்மலானை பகுதியில் அண்மையில் ‘கூடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய சகா ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: பெண் உட்பட 5 ஐவர் கைது மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான ‘கஞ்சிபானை இம்ரான்’ என்பவரின் நெருங்கிய உறவினராகக் கருதப்படும் மொஹமட் அஸ்மின் மொஹிதீன், கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.இந்தக் கொலைச் சம்பவத்தை பிரான்சில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான ‘கூடு அஞ்சு’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐவர் நேற்று (17) காலை மற்றும் நண்பகல் வேளைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதான ஆண் ஒருவரும் 23 வயதான பெண் ஒருவரும் 25 கிராம் 840 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று ஆண் சந்தேகநபர்கள் 12 கிராம் 380 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, இரத்மலானை பகுதியில் அண்மையில் ‘கூடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய சகா ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement