• Aug 19 2026

கல்முனை சீருடை விவகாரம்: அரசாங்கம் இன்னமும் எதிரணியில் இருப்பதாக நினைக்கிறதா? – மனோ கணேசன்

Chithra / Aug 19th 2026, 11:36 am
image


“இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜே.வி.பி. நினைக்கிறதா?” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து இன மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியும், 159 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பெரும்பான்மையும் அரசாங்கத்தின் பிரதான பலமாக உள்ளன.


இதற்கு மேலதிகமாக அமைச்சரவை, பிரதமர், சுகாதார அமைச்சர், தமிழ் பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்ததே அரசாங்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறான அதிகார பலத்தைக் கொண்ட அரசாங்கத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


கல்முனை சீருடை விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அனைவரையும் மாவட்ட செயலகத்தில் அழைத்து, சுகாதார அமைச்சர் தலைமையில் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய பிரச்சினையாக இது இருந்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


எனினும், ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக காலம் தாழ்த்தப்பட்டு, தற்போது “தற்காலிக தீர்வு” என ஒன்றை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நடவடிக்கைக்குக் கூட ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பியுள்ள அவர், எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை சந்தித்த நிலையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூகங்களிடம் மாத்திரம் கருத்துகளை வெளியிடுகின்றனர் என்றும், அரசாங்கத்தின் அதிகார மையத்தில் அவர்களின் செயற்பாடு போதுமானதாக இல்லை என்றும் மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.


“நாம் இலங்கையர்” என்ற சமத்துவ கோஷம் மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் போதே உண்மையான சமத்துவம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


தாம் அமைச்சராக இருந்த காலத்தில், அமைச்சரவையில் பல்வேறு விடயங்களை வலியுறுத்தி, போராடி தீர்வுகளை பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தற்போது தனது நினைவுக்கு வருவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கல்முனை சீருடை விவகாரம்: அரசாங்கம் இன்னமும் எதிரணியில் இருப்பதாக நினைக்கிறதா – மனோ கணேசன் “இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜே.வி.பி. நினைக்கிறதா” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து இன மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியும், 159 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பெரும்பான்மையும் அரசாங்கத்தின் பிரதான பலமாக உள்ளன.இதற்கு மேலதிகமாக அமைச்சரவை, பிரதமர், சுகாதார அமைச்சர், தமிழ் பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்ததே அரசாங்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான அதிகார பலத்தைக் கொண்ட அரசாங்கத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கல்முனை சீருடை விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அனைவரையும் மாவட்ட செயலகத்தில் அழைத்து, சுகாதார அமைச்சர் தலைமையில் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய பிரச்சினையாக இது இருந்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.எனினும், ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக காலம் தாழ்த்தப்பட்டு, தற்போது “தற்காலிக தீர்வு” என ஒன்றை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நடவடிக்கைக்குக் கூட ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பியுள்ள அவர், எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை சந்தித்த நிலையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூகங்களிடம் மாத்திரம் கருத்துகளை வெளியிடுகின்றனர் என்றும், அரசாங்கத்தின் அதிகார மையத்தில் அவர்களின் செயற்பாடு போதுமானதாக இல்லை என்றும் மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.“நாம் இலங்கையர்” என்ற சமத்துவ கோஷம் மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் போதே உண்மையான சமத்துவம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.தாம் அமைச்சராக இருந்த காலத்தில், அமைச்சரவையில் பல்வேறு விடயங்களை வலியுறுத்தி, போராடி தீர்வுகளை பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தற்போது தனது நினைவுக்கு வருவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement