• Apr 18 2026

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய சந்தேகநபர் கைது !

shanu / Mar 11th 2026, 10:14 am
image

கடந்த ஜனவரி மாதம் ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் குற்றவாளிகளுக்கு உதவியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கடந்த ஜனவரி 16 ஆம் திகதி கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தன. 


செவ்வாய்க்கிழமை  (10) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியொன்றில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து  குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் இரண்டு மேலதிக இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய சந்தேகநபர் கைது கடந்த ஜனவரி மாதம் ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் குற்றவாளிகளுக்கு உதவியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி 16 ஆம் திகதி கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தன. செவ்வாய்க்கிழமை  (10) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியொன்றில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து  குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் இரண்டு மேலதிக இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement