• Oct 03 2026

கிரெகரி ஏரியில் ஜெட் ஸ்கீ கவிழ்ந்து விபத்து – மயிரிழையில் இரு சிறுவர்களை மீட்ட கடற்படையினர்

Chithra / Aug 17th 2026, 1:53 pm
image


நுவரெலியா கிரெகரி ஏரியில் ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் நீரில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


நேற்று கிரெகரி ஏரியில் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் பயணித்த ஜெட் ஸ்கீ திடீரென கவிழ்ந்துள்ளது.


இதன்போது, ஏரியில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவு பதில் மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) அதிகாரிகள் சம்பவத்தை அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இரு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.


மீட்கப்பட்ட சிறுவர்கள் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னர், இரு சிறுவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கிரெகரி ஏரியில் ஜெட் ஸ்கீ கவிழ்ந்து விபத்து – மயிரிழையில் இரு சிறுவர்களை மீட்ட கடற்படையினர் நுவரெலியா கிரெகரி ஏரியில் ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் நீரில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.நேற்று கிரெகரி ஏரியில் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் பயணித்த ஜெட் ஸ்கீ திடீரென கவிழ்ந்துள்ளது.இதன்போது, ஏரியில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவு பதில் மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) அதிகாரிகள் சம்பவத்தை அவதானித்துள்ளனர்.இதனையடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இரு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர், இரு சிறுவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement