• May 20 2026

பகிடிவதைக் குற்றச்சாட்டில் கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!

Ziya / Dec 13th 2025, 9:15 am
image

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.


விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா  ஆள் பிணையில் விடுவித்தார்.


எதிர்வரும் ஜனவரி மாதம் 24ம் திகதிக்கு வழக்கை தவணையிட்டு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.








பகிடிவதைக் குற்றச்சாட்டில் கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா  ஆள் பிணையில் விடுவித்தார்.எதிர்வரும் ஜனவரி மாதம் 24ம் திகதிக்கு வழக்கை தவணையிட்டு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement