• Apr 21 2026

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி - 2025 நேற்று ஆரம்பம்!

shanu / Dec 4th 2025, 10:54 am
image

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 நேற்றைய தினம் (3) யாழ்ப்பாணத்தில்  ஆரம்பமாகியது. 


யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகிய 

போட்டி எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 


ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S. அறிவழகன்,கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி S. சிவன்சுதன்

பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு பெருமை மிக்க நிலத்தில் உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி, இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக திகழ்கிறது. 


போட்டியின்  பரிசுத் தொகை  24 இலட்சம் ரூபாவாகும்.   இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும்.


இந்தப் போட்டி முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த ஆண்டு  போட்டி  பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்தியாவிலிருந்து 20 க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர்.


ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.


யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டியானது இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச மேடையைத் திறக்கிறது. 


உலகத்துடன் போட்டியிடும் திறனை உருவாக்குகிறது. யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்துகிறது.


அடுத்த சில நாட்களில் பல அதிரடி ஆட்டங்கள் சதுரங்க ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி - 2025 நேற்று ஆரம்பம் இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 நேற்றைய தினம் (3) யாழ்ப்பாணத்தில்  ஆரம்பமாகியது. யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகிய போட்டி எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S. அறிவழகன்,கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி S. சிவன்சுதன்பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு பெருமை மிக்க நிலத்தில் உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி, இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக திகழ்கிறது. போட்டியின்  பரிசுத் தொகை  24 இலட்சம் ரூபாவாகும்.   இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும்.இந்தப் போட்டி முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த ஆண்டு  போட்டி  பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தியாவிலிருந்து 20 க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டியானது இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச மேடையைத் திறக்கிறது. உலகத்துடன் போட்டியிடும் திறனை உருவாக்குகிறது. யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்துகிறது.அடுத்த சில நாட்களில் பல அதிரடி ஆட்டங்கள் சதுரங்க ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement