அமெரிக்காவின் விஸ்கான்சினில் 69 வயதுடைய ஒருவர், நீண்ட நேரம் காரில் பயணிப்பதைத் தவிர்ப்பதற்காக தனது ஹெலிகாப்டரில் நேரடியாக கடைக்குச் சென்ற சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
Rosendale பகுதியிலிருந்து Cabela’s கடைக்கு ஹெலிகாப்டரில் பறந்த அவர், கடையின் வாகன நிறுத்துமிடத்தில் தரையிறங்கியுள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, “காரில் செல்வதற்கு அதிக நேரம் ஆகிறது” என்பதையே காரணமாகக் கூறியுள்ளார்.
விசாரணையில் அந்த நபர் முறையான விமானி உரிமம் பெற்றிருந்ததும், ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரையிறக்கியதும், விமானப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றியதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது எந்த விதிமீறல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடைக்குச் செல்ல இப்படி ஒரு வழியா ஹெலிகாப்டரில் பறந்த 69 வயது முதியவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் 69 வயதுடைய ஒருவர், நீண்ட நேரம் காரில் பயணிப்பதைத் தவிர்ப்பதற்காக தனது ஹெலிகாப்டரில் நேரடியாக கடைக்குச் சென்ற சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.Rosendale பகுதியிலிருந்து Cabela’s கடைக்கு ஹெலிகாப்டரில் பறந்த அவர், கடையின் வாகன நிறுத்துமிடத்தில் தரையிறங்கியுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, “காரில் செல்வதற்கு அதிக நேரம் ஆகிறது” என்பதையே காரணமாகக் கூறியுள்ளார்.விசாரணையில் அந்த நபர் முறையான விமானி உரிமம் பெற்றிருந்ததும், ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரையிறக்கியதும், விமானப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றியதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது எந்த விதிமீறல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.