ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வரும் போதிலும், இலங்கையில் உடனடியாக எபோலா பரவும் அபாயம் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சம்மேளனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக 246 சந்தேகத்திற்கிடமான தொற்றுகளும், 65 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. எனினும், நிலைமை உலக சுகாதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பிற நாடுகளுக்குப் பரவும் வாய்ப்பு குறைவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருகை தருவோர், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையையோ அல்லது தகுதியுள்ள மருத்துவரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் பரவலைத் தடுக்க விமான நிலையங்களில் பரிசோதனைகளை பலப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இலங்கையில் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் எபோலா வைரஸ் பரவும் அபாயம் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வரும் போதிலும், இலங்கையில் உடனடியாக எபோலா பரவும் அபாயம் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சம்மேளனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.சர்வதேச ரீதியாக 246 சந்தேகத்திற்கிடமான தொற்றுகளும், 65 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. எனினும், நிலைமை உலக சுகாதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பிற நாடுகளுக்குப் பரவும் வாய்ப்பு குறைவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருகை தருவோர், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையையோ அல்லது தகுதியுள்ள மருத்துவரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நோய் பரவலைத் தடுக்க விமான நிலையங்களில் பரிசோதனைகளை பலப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இலங்கையில் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.