• Apr 15 2026

QR குறியீட்டை பெற விசேட WhatsApp இலக்கம் அறிமுகம் - QR இன்றி இன்று முதல் விநியோகம் இல்லை

Chithra / Mar 18th 2026, 12:35 pm
image

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 


பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்போது, தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 


வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்பதுடன், வழங்கப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


மேலும்  வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட QR குறியீட்டுக்கான தொலைபேசி எண்ணை மறந்துவிட்டால், இன்று பிற்பகல் முதல் தங்களது தற்போதைய தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி QR குறியீட்டை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

 

இதேவேளை QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும், இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அந்தச் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


"கடந்த சில தினங்களில் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கியிருந்தோம். ஆனால், இனிமேல் QR குறியீட்டிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும். 

அவசரத் தேவை ஏற்பட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறொருவரின் வாகனத்தில் செல்லுமாறே கேட்டுக்கொள்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்


QR குறியீட்டை பெற விசேட WhatsApp இலக்கம் அறிமுகம் - QR இன்றி இன்று முதல் விநியோகம் இல்லை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்பதுடன், வழங்கப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.மேலும்  வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட QR குறியீட்டுக்கான தொலைபேசி எண்ணை மறந்துவிட்டால், இன்று பிற்பகல் முதல் தங்களது தற்போதைய தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி QR குறியீட்டை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.  இதேவேளை QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும், இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அந்தச் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்."கடந்த சில தினங்களில் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கியிருந்தோம். ஆனால், இனிமேல் QR குறியீட்டிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும். அவசரத் தேவை ஏற்பட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறொருவரின் வாகனத்தில் செல்லுமாறே கேட்டுக்கொள்கிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement